Pages

Sunday, 6 December 2015

அகநானூறு Agananuru 49

காடு உடன் கழிதல் அறியின்
ஆடுவழி ஆடுவழி அகலேன் மன்னோ


செவிலி சொல்கிறாள். என் மகளின் பருவ அழகைப் பார்த்துத் தழுவினேன். அவளும் பலமுறைத் தழுவினாள். அவள் தன் காதலனுடன் செல்லப்போவதன் அறிகுறிதான் அவளது தழுவல் என்பது இப்போதுதான் தெரிகிறது.

சுளை

1
முன்பெல்லாம் என்மகள் கிளித்தட்டு, பந்து, கழங்கு விளையாடுவதில் ஆர்வம் காட்டுவாள். இப்போது காட்டுவதில்லை. அவள் பிறரோடு பழகும் அளி, பிறரிடம் காட்டும் அன்பு, அவள் மேனியின் தோற்றம், நடந்துகொள்ளும் இயல்பு ஆகியவற்றிலும் வேறுபாடு தெரிகிறது. எனவே நான் அவளை மெல்லத் தழுவினேன். “என் உயிரே! இப்படிச் சோர்ந்திருக்கலாமா” என்று சொல்லிக்கொண்டே தழுவினேன்.
இறீஇயர் > இறு < இறை = தங்கியிருத்தல்,
சிந்தனையில் ஆழ்ந்து அமைதியாக இறைவன் போல் இருத்தல்
2
மரத்தில் கட்டிப் போட்டிருக்கும் கறவை மாடு தன் கன்றுக் குட்டியைப் பார்ப்பது போல நான் என் மகளைப்  பார்த்தேன். அவள் என்னிடம் வந்தாள். நான் அவள் நெற்றியைத் தடவிக்கொடுத்தேன். மெல்லத் தழுவினேன்.
3
அவளும் என்னைத் தழுவினாள். நன்றாகத் தழுவினாள். தன் மார்பகத்தில் வியர்வை தோன்றும்படி திரும்பத் திரும்பப் பலமுறை தழுவினாள். (அது புதுமையாக இருந்தது)
4
இவள் நெஞ்சில் இருப்பவன் ‘விறல்மிகு நெடுந்தகை’. அவன் இவளைப் பலபடப் பாராட்டிக்கொண்டே அழைத்துச் செல்வான். வறண்டு கிடக்கும் நிழலில் இளைப்பாறுவார்கள். வானம் பிணக்குப் போட்டுக்கொண்டு மழை பெய்யாமையால் அசைபோடும் மான்-இனம் கானல் நீரைச் சுவைக்கும் காட்டு வழியில் தன் காதலனுடன் செல்வாள். இது எனக்கு முன்பே தெரிந்திருந்தால்,
5
இவளது தந்தையின் கட்டுக்காவல் மிக்க வீட்டில் இவள் தங்கியிருந்தபோதே இவள் செல்லுமிடமெல்லாம் சென்று தடுத்திருப்பேன். உடம்பு செல்லுமிடமெல்லாம் செல்லும் நிழல் போலச் சென்று தடுத்திருப்பேன். விளயாட்டுத் தோழிமாருடன் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு காலில் இருக்கும் சிலம்பு ஒலிக்கும்படி ஓடி விளையாடிய இடத்துக்கெல்லாம் சென்றிருப்பேன். இவளை விட்டு அகலாமல் சென்றிருப்பேன். – இப்படி எண்ணிச் செவிலி தன்னை நொந்துகொள்கிறாள்.

பாடல்
சொல் பிரிப்புப் பதிவு
திணை - பாலை
1
'கிளியும், பந்தும், கழங்கும், வெய்யோள்
அளியும், அன்பும், சாயலும், இயல்பும்,
முன்நாள் போலாள்; இறீஇயர், என் உயிர்' என,
2
கொடுந் தொடைக் குழவியொடு வயின்மரத்து யாத்த
கடுங் கட் கறவையின் சிறுபுறம் நோக்கி,       5
குறுக வந்து, குவவுநுதல் நீவி,
மெல்லெனத் தழீஇயினேனாக, என் மகள்
3
நன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்ப,
பல் கால் முயங்கினள் மன்னே! அன்னோ!
4
விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி,                10
வறன் நிழல் அசைஇ, வான் புலந்து வருந்திய
மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும்
காடு உடன்கழிதல் அறியின் தந்தை
5
அல்குபதம் மிகுத்த கடிஉடை வியல் நகர்,
செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல,      15
கோதை ஆயமொடு ஓரை தழீஇ,
தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப, அவள்
ஆடுவழி ஆடுவழி, அகலேன் மன்னே!          

உடன்போயின தலைமகளை நினைந்து, செவிலித்தாய்மனையின்கண் வருந்தியது.
வண்ணப்புறக் கந்தரத்தனார் பாடியது

Daughter eloped with her lover. Nursing-mother says these words in meloncaly.
She always used to play games jugglery, coin-tossing and lame-leg once upon a time. But now she likes to be alone. There is a change in her body and attitude. What happens to her, I think. I pay a glance at her. She came to me. I touched her eye-brow and hugged. She embossed me tightly with perspiration. There was a change in it. I couldn’t read its meaning at that time.    
Now I can understand the meaning of her embrace.
She is eloping. Her lover praises her staying in heat shadow. The deer family will be tasting air-water in hot summer.
Would I have inferred earlier I wouldn’t let her to go anywhere as she likes. I would have followed her avoiding her elopement. 

A poem by: Kantarattanar of Vannappuram village.   
The text is belongs to second century B.C. or earlier.  

அவள் சிலம்பு ஒலிக்க ஓடி விளையாடுவாள் 

No comments:

Post a Comment