Pages

Saturday 5 December 2015

அகநானூறு Agananuru 46

கொற்றச் செழியன் அள்ளூர் நெல்லங்கதிர்


ஊர! நீ பிறள் ஒருத்தியை நம் மனைக்கே அழைத்து வந்து அவளோடு இருந்தாய் என்று கூறுகின்றனர். உன்னை நினைத்து ஏங்கி என் வளையலெல்லாம் கழன்று விழுந்தாலும் விழட்டும். நீ அவளிடமே செல். யாரும் தடுக்கப்போவதில்லை. – தலைவி இப்படிச் சொல்லி ஊடுகிறாள்.
1
எருமை சேற்றிலே கிடக்க விரும்பும். ஊரே உறங்கும் வேளையில் தன்னை கட்டியிருந்த கயிற்றை அறுத்துக்கொண்டு முள்வேலியைத் தன் கொம்புகளால் விலக்கிக்கொண்டு பழஞ்சேற்றில் இறங்கும். அப்போது அங்குள்ள மீன்கள் ஓடும். வள்ளைக் கொடி மிதிபடும். வண்டு மொய்த்துக்கொண்டிருக்கும் தாமரை மலரை மேயும். இப்படிப்பட்ட ஊரினை உடையவன் நீ.
முனைஇய = முன்னிய = விரும்பிய
காரான் = கறுப்புப் பசு = எருமை
பழனம் = பழஞ்சேறு பட்ட குளம்
2
நீ எனக்கு யார்? உன்னோடு நான் பிணக்குப் போட்டுக்கொள்ள மாட்டேன். பிறள் ஒருத்தி. நீண்டு தாழ்ந்து மினுக்கும் கூந்தலை உடையவள். வாரியும் அடங்காமல் விரிந்துகிடக்கும் கூந்தலை உடையவள். அவளை நம் வீட்டுக்கே அழைத்துவந்து உறவாடினாய் என்கின்றனர். அதனை நான் கூறமாட்டேன். நீ வாழ்க.
வதுவை = 
ஒருவன் ஒருத்தியை வைத்துக்கொண்டு உறவாடுதல் = 
வைப்பாட்டி உறவு
3
என் தந்தை போன்றவன் கொற்றச்செழியன். பகைவரின் யானைப் படையைத் தன் வாள்-படை கொண்டு வென்றவன். அவன் ஊர் அள்ளூர். பிடிப்பிடியாகக் கதிர் ஈனும் நெல்வயல் கொண்ட அள்ளூர். அந்த நெல்லங்கதிர் போன்ற என் வளையல் உன்மீதுள்ள ஆசை ஏக்கத்தால் கழன்று விழுந்தாலும் பரவாயில்லை. உன்னை யார் தடுக்கப்போகிறார்கள்? நீ அவளிடமே செல்க.


பாடல்
சொல் பிரிப்புப் பதிவு
திணை -  மருதம்

1
சேற்று நிலை முனைஇய செங் கட் காரான்
ஊர் மடி கங்குலில், நோன் தளை பரிந்து,
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி,
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய
அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை  5
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர!
2
யாரையோ? நிற் புலக்கேம். வாருற்று,
உறை இறந்து, ஒளிரும் தாழ் இருங் கூந்தல்,
பிறரும், ஒருத்தியை நம் மனைத் தந்து,
வதுவை அயர்ந்தனை என்ப. அஃது யாம்         10
கூறேம். வாழியர், எந்தை! செறுநர்
3
களிறுடை அருஞ் சமம் ததைய நூறும்
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என்
ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க;          15
சென்றி, பெரும! நிற் தகைக்குநர் யாரோ?      

வாயில் வேண்டிச் சென்றதலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.
அள்ளூர் நன் முல்லையார் பாடியது

You, a man of a dirty village! You brought a girl to our house and enjoyed, somebody says. Even though I would suffer in love-sick I wouldn’t be against your will. Do enjoy as you like. – Heroine says to hero.  
Buffalo likes mud. Once, in a night, when all the people are sleeping, it breaks its tie-rope, removes thorn-fence by its horns, fell in the mud destroying Vallai-creeper and eats lotus. You are a man of such a dirty village. As it does, you did a dirty thing, says somebody.   
Who are you to me I shall sulk? You call a girl to our residence and enjoyed, others say. I wouldn’t interfere in your action. Be happy.
You see my bangles. They are about to dropout. They are as beautiful as the paddy punch in yield in village Allur ruled by my father like king KotraCheliyan. Even though, I wouldn’t feel.

A poem by:  NanMullaiyar of Allur Village
The text is belongs to second century B.C. or earlier.  

சேற்றில் எருமைக் கடா

No comments:

Post a Comment