பசுமிளைத் தண் குடவாயில்
பசுமையான காடுகளைக் காவலாகக் கொண்ட குடவாயில்
குடவாயில் போல் இன்பம் தரும் மார்பினள்
போர் முடிந்தது.
எல்லாரும் இல்லம் திரும்புகின்றனர்.
பாக!
நம் தேர் முன்னே செல்லும்படி ஓட்டிச்செல்.
குடவாயில் ஊர் போல இன்பம் தரும் என்னவளை நான் பெறவேண்டும் – என்கிறான் தலைவன்.
1
நம் வேந்தன் வந்தான்.
போர்த்தொழிலை முடித்துவைத்தான்.
பகைவர்கள் நம் மன்னனுக்குத் திறை தந்து நம்மவர் ஆயினர்.
மாறுபட்டிருந்த படைகள் இரண்டும் ஒன்றாயினோம் என்று முரசை முழக்கின.
2
பாக!
உன் தேரை ஓட்டு.
பிறர் தேருக்குப் பின்செல்ல விடாமல் முன்னே செல்லும்படி ஒட்டு.
3
அன்று ஒரு போர்.
அது முடிந்தது.
நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை, கணையன் ஆகிய ஏழுபேர் ஒன்றுகூடிச் சோழனைத் தாக்கிய போர்.
கட்டூர் என்னுமிடத்தில் போர் நடந்தது.
எழுவரும் சேர்ந்து சோழர்படையின் தலைவன் பழையன் என்பவனைக் கொன்றனர்.
அப்போதைய சோழ மன்னன் பெரும்பூட்சென்னி.
கழுமலம் (சீர்காழி), அழும்பில் (திருவழுந்தூர்), குடவாயில் ஆகிய ஊர்கள் அவன் ஆளுகைக்கு உட்பட்டிருந்த ஊர்கள்.
பழையன் இழப்பைச் சோழ அரசன் சென்னியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
தானே படைக்குத் தலைமை தாங்கிச் சென்று போரிட்டான்.
எதிர்த்த எழுவரில் ஆறு பேர் ஓடித் தப்பித்துக்கொண்டனர்.
கணையன் என்பவன் மட்டும் அகப்பட்டுக்கொண்டான்.
சென்னி கணையனைக் கழுமலம் கொண்டுவந்து சிறையிட்டான்.
இந்தச் சென்னியின் தலைநகர் குடவாயில்.
அது அழும்பில் ஊர் போல புதுப்புது வருவாய் நல்கும் ஊர்.
நெல்வளம் மிக்க பழங்குடி மக்கள் பலர் வாழும் கடல் (பரவை) போன்ற ஊர்.
பொங்கி விரியும் காலடி கொண்ட யானை படியும் குளம் (கயம்) பல மண்டிக் கிடக்கும் பசுமையான காவல் காடுகளைக் கொண்ட ஊர்.
இந்தக் குடவாயில் போல் இன்பம் தரும் ஆகம் (மார்பகம்) கொண்டவள் என்னவள்.
அவனது ஆகத்தில் துயில் கொள்ளவேண்டும்.
விரைந்து ஓட்டு.
பாடல்
சொல் பிரிப்புப் பதிவு
திணை - முல்லை
1
வந்து வினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும்
தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே;
முரண் செறிந்திருந்த தானை இரண்டும்
ஒன்று என அறைந்தன பணையே; நின் தேர்
2
முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது, 5
ஊர்க, பாக! ஒரு வினை, கழிய
3
நன்னன், ஏற்றை, நறும் பூண் அத்தி,
துன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி,
பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு
அன்று அவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர், 10
பருந்து படப் பண்ணி, பழையன் பட்டென,
கண்டது நோனானாகி, திண் தேர்க்
கணையன் அகப்பட, கழுமலம் தந்த
பிணைஅல்அம் கண்ணிப் பெரும் பூட் சென்னி
அழும்பில் அன்ன அறாஅ யாணர், 15
பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவை,
பொங்கடி படிகயம் மண்டிய பசு மிளை,
தண் குடவாயில் அன்னோள்
பண்புடை ஆகத்து இன் துயில் பெறவே!
வினை முற்றி மீளும்தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
குடவாயிற் கீரத்தனார் பாடியது
Drive the chariot not to chase; but to lead. I like to enjoy my lady. She is as sweet as the village Kudavayil. The hero says to his driver.
The war is over. Drive fast the chariot to get sleep with my lady. The hero requests his driver.
You, my chariot-driver! You see. The king came and receives tribute. Both the armies are beating Pease-band.
The poet inserts a historical event to mention the bravery and sweetness of the village.
Allied seven kings attack the Chola king. PerumPutChenni is the name of the Chola king. Captain Palayan leads the Chola-army. The opponents killed him. Hence, the Chola king himself leads and fights. Six among the seven ran away retreating.
Nanan, Atrai, Atti, Gangan, Katti and Puntrurai are the six kings ran away from the war-field. One among the seven King Kanaiyan is caught-up. He is brought to Kalumalam village.
The king’s capital is Kudavayil. It is inhabitant of rich people with paddy, living hereditary. It is a treasure of new and new income as the village Alumbil. There are ponds in Kudavail village where the elephants enjoy. The village is surrounded by Fort-forests. Such an enjoyable village, it is. The heroin is as sweet as this enjoyable village, the poet describes.
A poem by: Kirattanar of Kudavayil village
The text is belongs to second century B.C. or earlier.

No comments:
Post a Comment