பூசணிக்காய், பரமசிவன் இரண்டும் ஒன்று எனச் சொல்லமைதியால் இரட்டுற மொழிந்து காளமேகப்புலவர் நிறுவியுள்ளார்.
பாடல்
அடிநந்தி சேர்தலா லாகம் வெளுத்துக்
கொடியுமொரு பக்கத்திற் கொண்டு – வடிவுடைய
மாசுணத்தைப் பூண்டு வளைத்தழும்பு பெற்றதனால்
பூசணிக்கா யீசனெனப் போற்று (21)
பூசணிக்காய்
அடி நந்தி சேர்தலால் ஆகம் வெளுத்துக்
கொடியும் ஒரு பக்கத்தில் கொண்டு – வடிவுடைய
மாசுணத்தைப் பூண்டு வளைத்து அழும்பு பெற்றதனால்
அடிப்பக்கம் காம்பு (நந்தி) சேர்ந்திருக்கும்.
உடம்பு வெள்ளையாக இருக்கும்.
பூசணிக்கொடியை ஒருபக்கத்தில் கொண்டிருக்கும்.
அந்தக் கொடியில் பெரிதும் சுணை கொண்டிக்கும்.
பூசணிக்காய் வளைந்து அழுந்தி இருக்கும்.
ஈசன்
அடி நந்தி சேர்தலால் ஆகம் வெளுத்துக்
கொடியும் ஒரு பக்கத்திற் கொண்டு – வடிவுடைய
மாசுணத்தைப் பூண்டு வளைத் தழும்பு பெற்றதனால்
ஈசன் கோயிலின் அடியில் (முதலில்) நந்தி என்னும் காளைமாடு இருக்கும்.
சிவன் திருநீறு பூசிய வெண்ணிற மேனியை உடையவன்.
உமை என்னும் பெண்கொடியை ஒரு பக்கத்தில் கொண்டவன்.
நல்லழகுடைய மாசுணம் என்னும் பாம்பைக் கழுத்திலே பூண்டிருப்பவன்.

No comments:
Post a Comment