ஓடம் நிதம்பம் ஆகிய இரண்டும் ஒன்று எனச் சொல்லமைதியால் இரட்டுற மொழிந்து காளமேகப்புலவர் நிறுவியுள்ளார்.
பாடல்
பலகையிடும் உள்ளே பருமாணி தைக்கும்
சலமிறைக்கும் ஆளேறித் தள்ளும் - உலகறிய
ஓடமுமொன் றேயுலக நாதன் பெண்டிரே
மாடமுமொன் றேற்ற மயிர். (22)
ஓடம்
பலகை இடும் உள்ளே பரும் ஆணி தைக்கும்
சலம் இறைக்கும் ஆளேறித் தள்ளும்
ஓடத்தில் பலகை இடப்படிருக்கும்.
அந்தப் பலகைகள் பருத்த ஆணிகளால் தைக்கப்பட்டிருக்கும்.
ஓடத்தில் தண்ணீர் விழுந்தால் இறைத்து வெளியில் ஊற்றப்படும்.
ஓடத்தின்மீது ஆள் ஏறித் தள்ளுவர்.
மயிர்-மாடம் (பெண்குறி)
பல கை இடும் உள்ளே பருமாணி தைக்கும்
சலம் இறைக்கும் ஆளேறித் தள்ளும்
பெண்குறியில் பலமுறை கை வைத்து ஆசையை மூட்டுவார்கள்.
அதனுள்ளே ஆணி போன்ற பருப்பு-உறுப்பு இருக்கும்.
காமநீரை வாரி இறைக்கும்.
No comments:
Post a Comment