உவகை எல்லாம் எனக்குள் பெய்கின்றது
தலைவியைத் திருமணம் செய்துகொள்ளத் தலைவன் வந்துகொண்டிருப்பதைத் தோழி மகிழ்ச்சிப் பெருக்குடன் தெரிவிக்கிறாள்.
தலைவியைத் தோழி விளிக்கிறாள்.
பித்திகைப் பூவின் அரும்பு போன்ற கடைக்கண் கொண்டவளே!
மழைக்காலத்தில் தழைக்கும் பூ பித்திகம்.
பறித்து மாளாமல் மணம் பரப்பிக்கொண்டிருக்கும் பூ பித்திகம்.
பித்திகம் போல் கடைக்கண்.
பித்திகம் போலக் கடைக்கண் சிவந்திருக்கும் பித்திகம்.
வெரிந் = தோல்
மாந்தளிர் போன்ற மாநிற மேனி கொண்டவளே!
வறட்சியால் வாடிக்கிடக்கும் காலத்தில் குளம் நிறையும்படிப் பெருமழை பொழிந்த விடியற்கால வேளையில் பலரும் மகிழ்வது போன்று என் உள்ளம் திளைக்கிறது.
காரணம் வெற்பன் உன்னைத் திருமணம் செய்துகொள்ள வந்துகொண்டிருக்கிறான் – என்கிறாள் தோழி.
நாடு வறண்டுகிடக்கிறது.
உழும் கலப்பை உறங்குகிறது.
கோடைக்காலம் நீண்டுகொண்டே இருக்கிறது.
நிலத்தில் பச்சைநிறப் புல் பூண்டுகளே இல்லை.
மலைப்பகுதியும் பாறாங்கல் கொண்ட குன்று போல் காணப்படுகிறது.
பறவைகள் கூட தங்க முடியாத அளவுக்கு மரங்கள் உள்ளன.
இப்படிப்பட்ட கோடைக்காலத்தில் அகன்ற குளம் நிறையும்படி பெருமழை பொழிந்த விடியற்கால வேளையில் பலரும் மகிழ்வது போல நான் மகிழ்கிறேன்.
பாடல் 42 குறிஞ்சி
சொல் பிரிப்புப் பதிவு
மலி பெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்
கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகைச்
செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண்,
தளிர் ஏர் மேனி, மாஅயோயே!
நாடு வறம் கூர, நாஞ்சில் துஞ்ச, 5
கோடை நீடிய பைது அறு காலை,
குன்று கண்டன்ன கோட்ட, யாவையும்
சென்று சேக்கல்லாப் புள்ள, உள் இல்
என்றூழ் வியன்குளம் நிறைய வீசி,
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை, 10
பல்லோர் உவந்த உவகை எல்லாம்
என்னுள் பெய்தந்தற்றே சேண் இடை
ஓங்கித் தோன்றும் உயர் வரை
வான் தோய் வெற்பன் வந்தமாறே
தலைமகன்வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.
கபிலர் பாடியது
The friend-maid shares the glad-news of hero’s arriving to marry, to her lady. She said that she is in as happy mood as people when the rain falls to fill the lakes and ponds after a long span of dry season; the season that appears any green plants in land, trees without bird-shelters and plows are sleeping without use.
When she addresses her lady, she praises her beauty, describing her eye-ends are as the buds of Pittigai-flower and her skin as tender as Mango-new-leaves.
A poem by: Kabilar
The text is belongs to second century B.C. or earlier.
![]() |
| பித்திகை மொட்டுப் போன்ற கடைக்கண் |

No comments:
Post a Comment