Pages

Monday, 12 October 2015

குறிஞ்சிப் பாட்டு Kurinjipattu 27

உறவு

நாணமும், அச்சமும் கொண்டு நான் பிரிந்துவிட்டேன். 

அது மயிலாடும் பாறை.
சுனையில் பலாப்பழத் தேன் ஒழுகியது     
அச்சமும் நாணமும் ஓடிப்போக வேண்டிய இடத்துக்கு ஓடிப் போய்விட்டன.
‘ஒய்’ என்று அவள் நெஞ்சை அவன் தன் நெஞ்சில் அணைத்துத் தழுவிக்கொண்டான்.

அவள் பிரிய முயன்றாள்.
அவன் விடவில்லை.
பழுத்த மிளகு உதிர்ந்து கிடந்த பாறை.
பக்கத்தில் நீண்ட சுனை.
அதில் முழு மாம்பழம் ஒன்று விழுந்தது.

உள்ளுறை
சுனை – பெண்ணுறுப்பு
மிளகு – பெண்ணுறுப்பில் உள்ள பருப்பு
மாம்பழம் – ஆண் விந்து

பக்கத்து மரத்தில் பழுத்திருந்த பலாப்பழத்தில் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன.
அதிலிருந்து பலாத்தேன் சுனையில் ஒழுகியது.
அதைத் தண்ணீர் என்று கருதி மயில் பருகியது.
மயங்கி ஆடியது.

உள்ளுறை
பலாத்தேன் – அவள் உறுப்பின் ஊறல்
மயில் – தலைவி
மயக்கம் – கலவி மயக்கம்

ஊரிலே திருவிழா.
கயிற்றில் ஏறிப் பெண் ஆடினாள்.
உறுமுதலும் தட்டலும் கேட்கும் மேளத்தின் பாணிக்கேற்ப ஆடினாள்.
இந்த ஆடுமகள் கயிற்றின்மேல் ஏறி ஆடுவதுபோல் மயில் மரக்கிளையில் ஏறி ஆடியது.
மலையில் வாழும் அரம்பையர் போல் சாயல் கொண்டவை அந்த மயில்கள்.

உள்ளுறை
கயிறூர் பாணி – அவர்கள் மோதி விளையாடியது.

He and she played in lust.

குறிஞ்சிப் பாட்டு – சொல்-பிரிப்புப்-பதிவு

நாணும் உட்கும் நண்ணுவழி அடைதர,          
ஒய்யெனப் பிரியவும் விடாஅன், கவைஇ      185
ஆகம் அடைய முயங்கலின், அவ் வழி,          
பழு மிளகு உக்க பாறை நெடுஞ் சுனை,            
முழு முதற் கொக்கின் தீம் கனி உதிர்ந்தென,            
புள் எறி பிரசமொடு ஈண்டி, பலவின்   
நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல்,            190
நீர் செத்து அயின்ற தோகை, வியல் ஊர்ச்      
சாறு கொள் ஆங்கண் விழவுக் களம் நந்தி,    
அரிக் கூட்டு இன் இயம் கறங்க, ஆடு மகள்  
கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல்,
வரைஅர மகளிரின் சாஅய், விழைதக,              195

ஆரிய அரசன் பிரகத்தனைத்
தமிழ் அறிவித்தற்குக்
கபிலர்பாடியது
அகப்பொருள்
தோழி அறத்தொடு நிற்றல்


No comments:

Post a Comment