![]() |
| வாடிய மரம் |
- பொருள் தேடிக்கொண்டு மீள்வேன் என்றான் அவன்.
- இவள் வாடுவாளே என்று கூறித் தோழி தடுத்தாள்.
- அவன் தன் கோட்பாட்டில் உறுதியாய் நின்றான்.
- வழித் தோற்றமே இவளை நினைவுக்குக் கொண்டுவரும் என்கிறாள், தோழி.
He decides to earn for his family life
leaving his lover at home. The fried-maid of the lover-lady begged him not to
leave her explaining her physical and mental disorder. He didn’t care. He decided
to proceed. The maid appeals the wilting nature of the scene in his way to
indicate properly.
பாடியவர் – பாலைபாடிய பெருங்கடுங்கோ
பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
எண் - 3
திணை - பாலை
தோழி கூற்று
அறன்
இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும்,
வறன்
நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும்
இறை
நில்லா வளை ஓட, இதழ் சோர்பு பனி மல்க,
பொறை
நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள்
விறல்
நலன் இழப்பவும், வினை வேட்டாய்! கேஎள், இனி: 5
இது
தரவு
- அக்கம் பக்கத்தார் அறநெறி எது என்று எண்ணாமல், உங்கள் உறவு பற்றி முணுமுணுக்குமே என்று இவள் நாணுகிறாள்.
- வறுமையைப் போக்க நீ செல்லும் வழியிலுள்ள துன்பங்களையும் நினைக்கிறாள்.
- அதனால் உடல் இளைத்து அவள் கைவளையல்கள் கழன்றோடுகின்றன.
- கண் பூ இதழ்களில் பனிக்கும் கண்ணீர் மிகுதியாகிறது.
- உள்ளத்தில் பொறுத்துக்கொள்ள முடியாத நோய்.
- நெற்றி பொலிவு இழந்து காணப்படுகிறது.
- பெருமித அழகை இழந்துவிட்டாள்.
- இப்படி இவளை ஆளாக்கிவிட்டு, பொருளீட்டும் வினையில் நாட்டம் கொண்டுள்ளாய்.
- நான் சொல்வதைக் கேள் – தோழி தலைவனிடம் சொல்கிறாள்.
உடை
இவள் உயிர் வாழாள், நீ நீப்பின்’என, பல
இடைகொண்டு
யாம் இரப்பவும், எம கொள்ளாய் ஆயினை;
கடைஇய
ஆற்றிடை, நீர் நீத்த வறுஞ் சுனை,
அடையொடு
வாடிய அணி மலர் தகைப்பன
- நீ விட்டுச்சென்றால் இவள் உயிர் வாழமாட்டாள் என்று நான் கெஞ்சி எடுத்துரைத்தாலும், நீ கேட்காமல் செல்வாயாயின், வழியில் நீர் இல்லாத சுனையில் பூவும் இலையும் வாடிக் கிடப்பது உன்னைத் தடுத்து நிறுத்தும்.
‘வல்லை
நீ துறப்பாயேல், வகை வாடும் இவள்’ என, 10
ஒல்
ஆங்கு யாம் இரப்பவும், உணர்ந்தீயாய் ஆயினை;
செல்லு
நீள் ஆற்றிடை, சேர்ந்து எழுந்த மரம் வாட,
புல்லு
விட்டு இறைஞ்சிய பூங்கொடி தகைப்பன
- விரைந்து பிரிந்தால் இவள் வாடுவாள் என்று பொருந்தும் வகையால் எடுத்துரைத்துக் கெஞ்சுகிறேன்.
- நீ உணரவில்லை.
- நீ செல்லும் வழியில் வாடிய மரத்தில் ஏறும் கொடியும் ஏற முடியாமல் தவிப்பது உன்னைத் தடுத்து நிறுத்தும்.
பிணிபு
நீ விடல் சூழின், பிறழ்தரும் இவள்’ என,
பணிபு
வந்து இரப்பவும், பல சூழ்வாய் ஆயினை; 15
துணிபு
நீ செலக் கண்ட ஆற்றிடை, அம் மரத்து
அணி
செல, வாடிய அம் தளிர் தகைப்பன
இவை
மூன்றும் தாழிசை
- இவளோடு சேர்ந்திருப்பதைக் கைவிட நீ எண்ணினால் இவள் உயிர் பிறழ்ந்து போய்விடும் என்று பணிந்து சொல்லிக் கெஞ்சுகிறேன்.
- நீ உன் எண்ணத்திலேயே சுழன்றுகொண்டிருக்கிறாய்.
- துணிவுடன் நீ செல்லும் வழியில் மரங்களில் வாடித் தொங்கும் இலைகள் உன்னைத் தடுத்து நிறுத்தும்.
என
ஆங்கு
இது
தனிச்சொல்
என்றெல்லாம்,
யாம்
நிற் கூறவும் எம கொள்ளாய் ஆயினை;
ஆனாது
இவள்போல் அருள் வந்தவை காட்டி, 20
மேல்
நின்று மெய் கூறும் கேளிர் போல், நீ செல்லும்
கானம்
தகைப்ப, செலவு.
இது
வெண்பா சுரிதகம்
- நான் உனக்குச் சொன்னேன்.
- நீ ஏற்றுக்கொள்ளவில்லை.
- திரும்பத் திரும்ப இவள்மீது அருள் கொண்டவன் போலக் காட்டிக்கொள்கிறாய்.
- பொய் கூறி ஏமாற்றும் உறவினர் போல நடந்துகொள்கிறாய்.
- நீ செல்லும் பாதையாவது உன்னைத் தடுத்து நிறுத்தட்டும்.
தலைமகனால் பிரிவு
உணர்த்தப்பட்ட தோழி,
தலைமகட்கு அஃது
உரைத்து,
அவளது ஆற்றாமையின்
வகை தலைமகற்கு உணர்த்தவும்,
பின்னும் பிரிவின்மேல்
சென்ற உள்ளத்தன் ஆயினானை,
‘நீர் செல்லும்
கானமே நும்மை இடிக்கும் கேளிர்போல விலக்கும்’என,
அவன் செலவழுங்கும்
வகை அவள் கூறியது (2)
கி.மு. காலத்துப் பாடல்

No comments:
Post a Comment