கை
வளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும்,
மை
படு சிலம்பின் ஐவனம் வித்தி
அருவியின்
விளைக்கும் நாடனொடு,
மருவேன்
தோழி அது காமமோ பெரிதே.
உறையூர் முதுகூத்தன் பாடல்
மலையில்
ஐவன நெல் விளைவிப்பது போல அவன் என் கை வளையல் நழுவச் செய்தல், மேனியில் பசப்பூரச் செய்தல்
ஆகிய விளைச்சலை அருவியில் (என்னோடு விளையாடி) செய்கிறான். தோழி,
இனி அவனுடன் செல்லமாட்டேன். ஆனால் என் காம உணர்வு பெரிதாக வருகிறதே! என்ன செய்யலாம்?
கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:
Post a Comment