Pages

Saturday, 13 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 369

வாகை அமலை வால்நெற்று

369. பாலை

அத்த வாகை அமலை வால் நெற்று,
அரி ஆர் சிலம்பின், அரிசி ஆர்ப்பக்
கோடை தூக்கும் கானம்
செல்வாம் தோழி! நல்கினர் நமரே.

தோழி கிழத்திக்கு உடன் போக்கு உணர்த்தியது.

குடவாயிற் கீரத்தனார் பாடல்

அவர் ஒப்புக்கொண்டார். காலிலுள்ள சிலம்புப் பரல் ஒலிப்பது போல் வாகை நெற்று மேலைக்காற்று வீசும்போது ஒலிக்கும் காட்டின் வழியில் அவருடன் செல்லலாம்.

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment