Pages

Friday, 12 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 366

366. குறிஞ்சி

பால் வரைந்து அமைத்தல் அல்லது, அவர்வயின்
சால்பு அளந்து அறிதற்கு யாஅம் யாரோ?
வேறு யான் கூறவும் அமையாள், அதன் தலைப்
பைங் கண் மாச் சுனைப் பல் பிணி அவிழ்ந்த
வள் இதழ் நீலம் நோக்கி, உள் அகைபு,
ஒழுகு கண்ணள் ஆகி,
பழுது அன்று அம்ம, இவ் ஆயிழை துணிவே.

பல் பிணி அவிழ்ந்த
வள் இதழ் நீலம்

காவல் மிகுதிக்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு, இவ் வேறுபாடு எற்றினான் ஆயது?'' என்று செவிலி வினாவ, தோழி கூறியது.

பேரிசாத்தன் பாடல்

பால் என்னும் விதியால் ஒன்றுபட்டவர்களை இதுதான் சால்பு என்று கூறி நெறிப்படுத்துவற்கு நான் யார்? நான் சொல்லியும் அவள் கேட்கவில்லை. (அவனோடு நீராடிய சுனையில் பூத்திருக்கும் நீல மலரையே பார்த்துக் கண்ணீர் விடும் அவள் துணிவு பழுதுபட்டது அன்று.   

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment