365.
குறிஞ்சி
கோடு
ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும்
பாடு
இல கலிழ்ந்து பனி ஆனாவே
துன்
அரு நெடு வரைத் ததும்பி அருவி
தண்ணென்
முழவின் இமிழ் இசை காட்டும்
மருங்கில்
கொண்ட பலவின்
பெருங்
கல் நாட! நீ நயந்தோள் கண்ணே.
மதுரை நல்வெள்ளி
நெருங்க
முடியாத உயர்ந்த மலையில் முழங்கும் அருவி முழவு முழங்கும் இசையை நினைவூட்ட அருகில்
உள்ள பலாப் பழம் முழவு போல் தோன்றும் பெருமலை நாட்டை உடையவனே! நீ விரும்பியவளின் தோளில்
வளையல் நெகிழ்கிறது. கண்ணில் பனி கொட்டுகிறது.
கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:
Post a Comment