அரில் பவர்ப் பிரம்பின் வரி புற நீர்நாய்
வாளை
நாள் இரை பெறூஉம் ஊரன்
பொன்
கோல் அவிர் தொடித் தற் கெழு தகுவி
எற்
புறங்கூறும் என்ப; தெற்றென
வணங்கு
இறைப் பணைத் தோள் எல் வளை மகளிர்
துணங்கை
நாளும் வந்தன அவ் வரைக்
கண்
பொர,
மற்று அதன்கண் அவர்
மணம்
கொளற்கு இவரும் மள்ளர் போரே.
வேறு ஒரு பரத்தை தன்னைப் புறங்கூறினாள் எனக் கேட்ட இற்பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பக் கூறியது.
ஒளவையார் பாடல்
தற்கெழு தகுவி என்பவள் ஒருவனோடு மட்டும் வாழும் காதல்பரத்தை.
[மாதவியை
இத்தகையவள் எனலாம்]
![]() |
| அரில் பவர்ப் பிரம்பின் வரி புற நீர்நாய் |
பிரம்புப் புதர் போல் வரிகளை உடைய நீர்நாய் வாளைமீன் இரையைப் பெறும் ஊரன் அவன்.
பொன்போல்
வளையல் அணிந்திருக்கும் காதல்பரத்தை என்னைப் பழித்துக் கூறுகிறாள் என்று சொல்கிறார்கள்.
துணங்கை ஆடும் திருவிழா வந்துவிட்டது. அங்கே அவனைப் பார்த்துக் கண்ணடித்துத் தழுவிக்கொள்வது
யார் என்று நான் ஒருகைப் பார்த்துவிடுகிறேன். இது உடலழகைப் காட்டும் மள்ளர் போர்.
கி.மு. 2ஆம் நூற்றாண்டு



No comments:
Post a Comment