Pages

Thursday, 11 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 363


363. மருதம்

கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு,
செங் காற் பதவின் வார் குரல் கறிக்கும்
மடக் கண் மரையா நோக்கி, வெய்துற்று,
புல் அரை உகாஅய் வரி நிழல் வதியும்
இன்னா அருஞ் சுரம் இறத்தல்
இனிதோ பெரும! இன் துணைப் பிரிந்தே?

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி கிழவற்குச் சொல்லியது.

செல்லூர்க் கொற்றன் பாடல்

(குறிப்பு – இதனைப் பாலைத்திணை எனல் தகும்)

கண்ணி (கயிறு) போல் கொம்புகளை உடைய ஆண்மான் மடக்கண் பார்வையை உடைய பெண்-மரையா பதவு என்னும் அறுகம் புல்லைக் கறிப்பதை ஆசையோடு பார்த்துக்கொண்டே அற்பமான அடி கொண்ட உகாய் மர அருநிழலில் தங்கும் துன்பம் தரும் பாலைநிலச் சுர வழியில் என்னைப் பிரிந்து கடந்து செல்லல், பெரும, உனக்கு இனிமையாக இருக்கிறதா?    
    
கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment