Pages

Thursday, 11 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 362

362. குறிஞ்சி

முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேல!
சினவல் ஓம்புமதி; வினவுவது உடையேன்;
பல் வேறு உருவின் சில் அவிழ் மடையொடு,
சிறு மறி கொன்று, இவள் நறு நுதல் நீவி,
வணங்கினை கொடுத்தி ஆயின், அணங்கிய
விண் தோய் மா மலைச் சிலம்பன்
ஒண் தார் அகலமும் உண்ணுமோ, பலியே?

சிறு மறி கொன்று ...

வெறி விலக்கித் தோழி அறத்தொடு நின்றது.

வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தன்

முருகு சாமி ஏறி முதுமையான பாடல்களைப் பாடிக்கொண்டு வரும் சாமியாடி வேலனே! சினம் கொள்ளாதே. நான் ஒன்று சொல்கிறேன். 
பல்வேறு வகையான உணவுப்பண்டங்களைப் படையல் செய்து வைத்திருக்கிறார்கள். நீ ஆட்டுக்குட்டியை வெட்டிப் படையல் வணக்கம் செய்து அதன் இரத்தத்தை இவள் நெற்றியில் பூசுகிறாய். அப்படிச் செய்தால் என் உள்ளத்தை வருத்துகின்ற என் (காதல்) சிலம்பன் மார்பு உன் பலியை உண்டு என்னை அடைவானா?
    
கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment