357.
குறிஞ்சி
முனி
படர் உழந்த பாடு இல் உண்கண்
பனி
கால் போழ்ந்து, பணை எழில் ஞெகிழ் தோள்,
மெல்லிய
ஆகலின் மேவரத் திரண்டு,
நல்ல
என்னும் சொல்லை மன்னிய
ஏனல்அம்
சிறு தினை காக்கும் சேணோன்
ஞெகிழியின்
பெயர்ந்த நெடு நல் யானை
மீன்
படு சுடர் ஒளி வெரூஉம்
வான்
தோய் வெற்பன் மணவா ஊங்கே.
கபிலர் பாடல்
சினம்
கொண்ட நினைவோடு வருந்தி உறங்காமல் பனி பொழியும் கண்.
திரட்சி
நெகிழ்ந்த தோள்.
உடல்
மெலிவு.
வெற்பன்
தழுவுவதற்கு முன்பு இவை நல்லனவாக இருந்தன.
இப்போது நல்லன என்னும் சொல்லையே இழந்துவிட்டன.
சேண் என்னும் ஏணிப்பந்தல் மேல் இருந்துகொண்டு தினைப்புனம் காப்பவன் எரிந்த ஞெகிழிப் பந்தம் வானத்து எரிமீன் போல் வரக் கண்ட யானை வெருண்டு ஓடும் மலைநாடு கொண்ட வெற்பன் அவன்.
கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:
Post a Comment