நிழல்
ஆன்று அவிந்த நீர் இல் ஆர் இடைக்
கழலோன்
காப்பப் கடுகுபு போகி,
அறுசுனை
மருங்கின் மறுகுபு வெந்த
வெவ்
வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய
யாங்கு
வல்லுநள்கொல் தானே ஏந்திய
செம்
பொற் புனை கலத்து அம் பொரிக் கலந்த
பாலும்
பல என உண்ணாள்,
கோல்
அமை குறுந்தொடித் தளிர் அன்னோளே?
மகட்போக்கிய
செவிலித்தாய் உரைத்தது.
கயமன் பாடல்
நிழல்
இருந்து இல்லாமல் போன வழி.
வீரக்கழல்
அணிந்த அவள் காதலன் அவளைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வான்.
நீர்
அற்ற சுனையில் வெதுவெதுப்பாக இருக்கும் கலங்கலைக் குடிக்க அவளால் எப்படி முடியும்?
பொன்-கிண்ணத்தில் பொறி கலந்த பாலைக் குடிக்க மறுத்தவள் ஆயிற்றே வளையல் அணிந்த தளிர் போன்ற என் மகள்.
கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:
Post a Comment