Pages

Tuesday, 9 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 355

355. குறிஞ்சி

பெயல் கால் மறைத்தலின், விசும்பு காணலரே;
நீர் பரந்து ஒழுகலின், நிலம் காணலரே;
எல்லை சேறலின், இருள் பெரிது பட்டன்று;
பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல்
யாங்கு வந்தனையோ? ஓங்கல் வெற்ப!
வேங்கை கமழும் எம் சிறுகுடி
யாங்கு அறிந்தனையோ? நோகோ யானே.

பெயல் கால் மறைத்தலின்,
விசும்பு காணலரே

இரவுக்குறி நேர்ந்த தலைமகற்குத் தோழி நொந்து கூறியது.

கபிலர் பாடல்லஃ

மழை பொழியும் தாரையால் வானம் தெரியவில்லை.
மழைநீர் ஓடுவதால் நிலம் தெரியவில்லை.
சூரியன் மறைந்ததால் எங்கும் இருள்.
பலரும் தூங்கும் நள்ளிரவு.
மலைநாடனே, எவ்வாறு வந்தாயோ!
வேங்கைப்பூ கமழும் எம் சிறுகுடியை எவ்வாறு அறிந்துகொண்டாய்?
  
கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment