354.
மருதம்
நீர்
நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்;
ஆர்ந்தோர்
வாயில் தேனும் புளிக்கும்;
தணந்தனை
ஆயின்,
எம் இல் உய்த்துக் கொடுமோ
அம்
தண் பொய்கை எந்தை எம் ஊர்க்
கடும்
பாம்பு வழங்கும் தெருவில்
நடுங்கு
அஞர் எவ்வம் களைந்த எம்மே?
கயத்தூர் கிழான்
நீண்டநேரம்
நீராடினால் கருத்த கண்-கூடச் சிவக்கும்.
மிகுதியாக
உண்டால் இனிக்கும் தேன்-கூடப் புளிக்கும்.
நீண்ட
நாள் பிரிந்து வாழ்ந்தால் எம் வீடு மட்டும் இடம் தருமா?
பொய்கை
சூழ்ந்த எம் தந்தை ஊரில் கடுமையான பாம்பு நடமாடும் தெருவில் காமத்தால் நடுங்கும் உன்
துன்பம் போக்கிய என் தலைவியும் அப்படித்தான் ஆகிவிட்டாள். .
கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:
Post a Comment