Pages

Monday, 8 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 352

வௌவால்
352. பாலை

நெடு நீர் ஆம்பல் அடைப் புறத்தன்ன
கொடு மென் சிறைய கூர்உகிர்ப் பறவை
அகல்இலைப் பலவின் சாரல் முன்னி,
பகல் உறை முது மரம் புலம்பப் போகும்
சிறு புன் மாலை உண்மை
அறிவேன் தோழி! அவர்க் காணா ஊங்கே.

பிரிவிடைத் தோழிக்குக் கிழத்தி மெலிந்து கூறியது.

கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடல்

ஆம்பல் அடை(இலை)

பழமையான மரத்தில் பகலெலாம் இருந்த வௌவால் மாலை வந்ததும் பலா மரச் சோலையை நோக்கிச் செல்லும் என்பதை அறிவேன். இரவில் அந்த முதுமரம் தனித்துப் புலம்புவது போல ஆயின்னு என் நிலைமை.

ஆம்பல் இலையின் பின்பக்கம் போல் சிறகும், கூரிய நகங்களையும் கொண்டவை என வௌவால் பறவையின் பெயரைச் சொல்லாமல் பாடல் குறிப்பிடுகிறது.

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment