Pages

Sunday, 7 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 350

350. பாலை

அம்ம வாழி தோழி! முன் நின்று,
''பனிக் கடுங்குரையம்; செல்லாதீம்'' எனச்
சொல்லினம் ஆயின், செல்வர் கொல்லோ
ஆற்று அயல் இருந்த இருங் கோட்டு அம் சிறை
நெடுங் காற் கணந்துள் ஆள் அறிவுறீஇ,
ஆறு செல் வம்பலர் படை தலைபெயர்க்கும்
மலையுடைக் கானம் நீந்தி,
நிலையாப் பொருட் பிணிப் பிரிந்திசினோரே?


பிரிவு நேர்ந்த தலைமகள், அவனது நீக்கத்துக்கண் வேறுபட்டாளைத் தோழி வற்புறீஇயது.

ஆலந்தூர் கிழார். பாடல்

தோழி, எண்ணிப்பார். அவர் முன் நிற்று கண்பனி சோர, செல்ல வேண்டாம் எனச் சொல்லியிருந்தால் அவர் சென்றிருப்பாரா?
வழியில் செல்வத்துடன் புதியவர் யாராவது வருகிறாரா எனப் பார்த்து மற்றவர்க்கு அறிவித்துக்கொண்டு அவரது தலையை வாங்குவதற்காக வழிப்பறி செய்வோர் காத்திருக்கும் மலை வழியில் அவர் சென்றுள்ளாரே.

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment