349.
நெய்தல்
''அடும்பு அவிழ் அணி மலர் சிதைஇய மீன் அருந்தி,
தடந்
தாள் நாரை இருக்கும் எக்கர்த்
தண்ணம்
துறைவற் தொடுத்து, நம் நலம்
கொள்வாம்'' என்றி தோழி! கொள்வாம்;
இடுக்கண்
அஞ்சி இரந்தோர் வேண்டிய
கொடுத்து
''அவை தா'' எனக் கூறலின்,
இன்னாதோ, நம் இன் உயிர் இழப்பே?
சாத்தன்.
வலிமையான
கால்களை உடைய நாரை அடும்பு மலர் சிதையும்படி மீனை அருந்திய பின்னர் மணல் மேட்டில் இருக்கும்
கழித்துறையை உடையவன் அவன்.
என் இன்பத்தை
அவனுக்குக் கொடுக்கலாம் என்கிறாய்.
இரந்தவரின்
துன்பத்தைப் போக்க அவருக்குக் கொடுத்த ஒன்றைத் திருப்பித் தா எனக் கேட்க முடியுமா?
அவனை நினைத்துச் செத்துப்போன என் உயிரை எப்படிப் பெறமுடியும்?
கி.மு. 2ஆம் நூற்றாண்டு
No comments:
Post a Comment