Pages

Sunday, 7 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 347


347. பாலை

மல்கு சுனை உலர்ந்த நல்கூர் சுரமுதல்
குமரி வாகைக் கோலுடை நறு வீ
மட மாத் தோகைக் குடுமியின் தோன்றும்
கான நீள் இடை, தானும் நம்மொடு
ஒன்று மணம் செய்தனள் இவள் எனின்,
நன்றே நெஞ்சம்! நயந்த நின் துணிவே.

பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது.

காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணன்

நெஞ்சே! காட்டு வழியில் சென்று பொருளீட்டிவர எண்ணுகிறாய். இவளும் உடன் வரின் உன் எண்ணம் நன்று. (ஆனால் இவள் வரமாட்டாளே. அழைத்துச் செல்லவும் முடியாதே).
நீர் நிறைந்திருந்த சுனை காய்ந்துகிடக்கும் காடு அங்கே மயிலின் தோகை விரிப்பு போல் கோலம் கொண்ட அழகிய வாகை பூத்துக் கிடக்கும்.

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment