Pages

Saturday, 6 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 345

pandanus fascicularis
THA;L’AI
(or)
THAZAI 
தாழை

345. நெய்தல்

இழை அணிந்து இயல்வரும் கொடுஞ்சி நெடுந் தேர்
வரை மருள் நெடு மணல் தவிர்த்தனிர் அசைஇத்
தங்கினிர் ஆயின், தவறோ தகைய
தழை தாழ் அல்குல் இவள் புலம்பு அகல
தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங் கழி
இழுமென ஒலிக்கும் ஆங்கண்
பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே?

பகல் வந்து ஒழுகுவானைத் தோழி ''இரா வா'' என்றது.

அண்டர் மகன் குறுவழுதி

தேரில் மணலில் வருவதைத் தவிர்த்துத் தங்கினால் தவறு உண்டோ? எம் ஊர் உப்பங்கழி அலை தாழை மரத்தில் மோதும் அங்கேதான் உள்ளது.
அவன் வந்த தேரின் அமர்வுப் பகுதி மாலைகளால் அணிசெய்யப்பட்டிருந்தது.
மலை போல் குவிந்திருந்த மணலில் அது வந்தது.
அவள் தழையாடையால் உறுப்பை மறைத்திருந்தாள்.
ஊர் அலையொலி ஓயாத கழிநீரால் சூழப்பட்டிருந்தது.  
இது அவனை அங்கு வரலாம் என்று காட்டிய குறியிடம்.

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment