Pages

Saturday, 6 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 341

புன்கம்
341. நெய்தல்

பல் வீ படரிய பசு நனை குரவம்
பொரிப் பூம் புன்கொடு பொழில் அணிக் கொளாஅச்
சினை இனிது ஆகிய காலையும், காதலர்
பேணார் ஆயினும், ''பெரியோர் நெஞ்சத்துக்
கண்ணிய ஆண்மை கடவது அன்று'' என,
வலியா நெஞ்சம் வலிப்ப,
வாழ்வேன் தோழி! என் வன்கணானே.


''பருவ வரவின்கண் வேறுபடும்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது

மிளைகிழான் நல் வேட்டன்

தோழி! இளம் மொட்டுகள் பலவாகப் பூக்கும் குரவம் மரமும், பொரி போல் பூ உதிர்க்கும் புன்கம் மரமும் பொழில் எங்கும் பூத்துக் கிடக்கும் (கார்) காலத்திலும் காதலர் என்னைப் பேணாமல் விட்டுவிட்டாலும், “பெரியோர் தம் நெஞ்சில் நினைப்பது ஆண்மையாகிய கடமை” என்பதை என் நெஞ்சத்தில் வலிமையாகப் பற்றிக்கொண்டு உறுதியாக வாழ்வேன்.

கி.மு. 2ஆம் நூற்றாண்டு



No comments:

Post a Comment