Pages

Friday, 5 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 340


340. நெய்தல்

காமம் கடையின் காதலர்ப் படர்ந்து,
நாம் அவர்ப் புலம்பின், நம்மோடு ஆகி,
ஒரு பாற் படுதல் செல்லாது, ஆயிடை,
அழுவம் நின்ற அலர் வேர்க் கண்டல்
கழி பெயர் மருங்கின் ஒல்கி, ஓதம்
பெயர்தரப் பெயர்தந்தாங்கு,
வருந்தும் தோழி! அவர் இருந்த என் நெஞ்சே.

இரவுக்குறி உணர்த்திய தோழிக்குக் கிழத்தி மறுத்தது.

அம்மூவன் பாடல்

தோழி! அவரை வைத்துக்கொண்டிருக்கும் என் நெஞ்சு அழுகிய நீரில் வேரை விட்டு மிதந்துகொண்டிருக்கும் கண்டல் அலை வரும்போது அதனுடனேயே சென்று மீள்வது போல எனக்குக் காம உணர்வு வரும்போது அவரை நினைத்துப் புலம்பி மீண்டு வருந்திக்கொண்டிருக்கிறது.

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment