செறுவர்க்கு உவகை ஆக, தெறுவர,
ஈங்கனம்
வருபவோ? தேம் பாய் துறைவ!-
சிறு
நா ஒண் மணி விளரி ஆர்ப்பக்
கடு
மா நெடுந் தேர் நேமி போகிய
இருங்
கழி நெய்தல் போல,
வருந்தினள், அளியள் நீ பிரிந்திசினோளே,
குன்றியன் பாடல்
விளரிப்
பண் என்பது இரங்கல் பண். (ஒப்பாரி). விளரிப் பண்ணுடன் உன் தேர்மணி ஒலிக்க உன் தேர்ச்
சக்கரம் செல்லும்போது நசுக்குப்பட்டுக் கிடக்கும் நெய்தல் போல இவள் நீ இல்லாமல் வருந்துகிறாள்.
(உண்மைதான்) அதற்காக இவளைப் பாதுகாப்பவர் எள்ளி நகையாடும்படி இப்படி (இரவில்) வரலாமா?
கி.மு. 2ஆம் நூற்றாண்டு
No comments:
Post a Comment