Pages

Wednesday, 3 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 331

நல் மா மேனி

331. பாலை

நெடுங் கழை திரங்கிய நீர் இல் ஆர் இடை,
ஆறு செல் வம்பலர் தொலைய, மாறு நின்று,
கொடுஞ் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும்
கடுங்கண் யானைக் கானம் நீந்தி,
இறப்பர்கொல் வாழி தோழி! நறுவடிப்
பைங் கால் மாஅத்து அம் தளிர் அன்ன
நல் மா மேனி பசப்ப,
நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே.

செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.

வாடாப் பிரமந்தன் பாடல்

நறுஞ்சுவை மாமரத்துத் தளிர் போன்ற என் மேனி பசக்கும்படி விட்டுவிட்டு அவர் நம்மைக் காட்டிலும் சிறந்த்து பொருள் எனக் கருதிப், பாலைநிலக் காட்டுவழியில் காட்டு-யானை திரிவதும், மூங்கில்கூடக் காய்ந்துபோனதும், வழிப்போக்கர்களைக் கொன்று அவர்களின் பொருள்களைப் பங்குபோட்டுக்கொள்ள வில்லும் கையுமாக மறவர்கள் திரிவதுமான வழியில் அவர் செல்கின்றார். செல்வாரோ?

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment