Pages

Tuesday, 2 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 330


330. மருதம்

நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்து எடுத்துத்
தலைப் புடைப் போக்கித் தண் கயத்து இட்ட
நீரின் பிரியாப் பரூஉத் திரி கடுக்கும்
பேர் இலைப் பகன்றைப் பொதி அவிழ் வான் பூ
இன் கடுங் கள்ளின் மணம் இல கமழும்
புன்கண் மாலையும், புலம்பும்,
இன்றுகொல் தோழி! அவர் சென்ற நாட்டே?

பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது.

கழார்க் கீரன் எயிற்றன் பாடல்

தோழி! அவர் சென்ற நாட்டில் மாலைக்காலத்தில் மணம் இல்லாமல் தேனோடு மலரும் பகன்றைப் பூ, வண்ணாத்தி (புலத்தி) துணியில் அழுக்குப் போக்க உளைமண் கட்டி குளத்து நீரில் அலசி எடுத்த துணி போல் பூத்துக் கிடக்கும் பகன்றைப் பூ இல்லை போலும். (இருந்திருந்தால் மணமின்றி முறுக்கிக்கொண்டு கிடக்கும் பகன்றை மலர் போல் தன் காதலி இருப்பாளே என எண்ணியிருப்பார் அன்றோ)  

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

ஆங்கிலத்தில்இதன் செய்தி  

No comments:

Post a Comment