Pages

Tuesday, 2 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 329

329. பாலை

கான இருப்பை வேனில் வெண் பூ
வளி பொரு நெடுஞ் சினை உஞற்றலின், ஆர் கழல்பு,
களிறு வழங்கு சிறு நெறி புதையத் தாஅம்
பிறங்குமலை அருஞ் சுரம் இறந்தவர்ப் படர்ந்து,
பயில் இருள் நடுநாள் துயில் அரிது ஆகி,
தெள் நீர் நிகர்மலர் புரையும்
நல் மலர் மழைக்கணிற்கு எளியவால், பனியே.

கான இருப்பை
வேனில் வெண் பூ

பிரிவிடை மெலிந்த கிழத்தி வற்புறுத்தும் தோழிக்கு, ''யான்'' ஆற்றுவல்'' என்பது படச் சொல்லியது.

ஓதலாந்தையார் பாடல்

களிறு சென்ற காலடியை காட்டில் வேனில் காலத்தில் பூக்கும் இரும்பைப் பூக்கள் காற்றில் உதிர்ந்து மறைக்கும் மலைத் தட வழியில் அவர் சென்றுள்ளார். அதனால் தூங்காமல் கிடக்கும் என் கண்களுக்கு, நீர்ப்பூப் போன்ற கண்களுக்கு, பனி பொழிவது கடினமன்று; எளிதுதான்.  

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment