327.
குறிஞ்சி
''நல்கின் வாழும் நல்கூர்ந்தோர் வயின்
நயன்
இலர் ஆகுதல் நன்று'' என உணர்ந்த
குன்ற
நாடன் தன்னினும், நன்றும்
நின்
நிலை கொடிதால் தீம் கலுழ் உந்தி!
நம்
மனை மட மகள், இன்ன மென்மைச்
சாயலள்; அளியள் என்னாய்,
வாழை
தந்தனையால், சிலம்பு புல்லெனவே.
கிழவன்
கேட்கும் அண்மையனாக, அவன் மலையினின்றும் வரும்
யாற்றொடு உரைப்பாளாய்க் கிழத்தி உரைத்தது.
அம்மூவன் பாடல்
![]() |
தீங்கலுழ்
உந்தி!
வாழை தந்தனையால்
|
இனிய கழுழ்(வண்டல்) நீரை உந்திக்கொண்டு வரும் ஆறு குன்றநாடன் பிரிந்திருக்கும் பாங்கினும் கொடிது.
கொடுத்தால்தான் வாழமுடியும் என வாழும் ஏழையிடம் அன்பு காட்டாமல் (அவன் இல்லாமல் வாழமுடியாத ஏழையாகிய என்னிடம், மடமகள், மெல்லியல், அளியல் என அன்பு காட்டாமல்) இருக்கும் என் குன்ற நாடனைக் காட்டிலும் ஆறே நீ கொடியை.
உன் கரையில்
வளர்ந்திருக்கும் உன் மகளாகிய வாழைமரம் என்னைப் போலவே மடப்பம் கொண்டதாயும், மெல்லிய
சாயல் உடையதாகவும், இரக்கம் கொண்டு அளிக்கத் தக்கதாகவும் இருக்கும் நிலையினை எண்ணிப்
பார்க்காமல் நீ பாயும் சிலம்புக்காடு புன்மை ஆகும்படி அதனை அடித்துக்கொண்டு வருகிறாய்.
அதனால் குன்ற நாடனை விட ஆறாகிய உன் பண்பு கொடிது.
அதனால் குன்ற நாடனை விட ஆறாகிய உன் பண்பு கொடிது.
கி.மு. 2ஆம் நூற்றாண்டு
No comments:
Post a Comment