321.
குறிஞ்சி
மலைச்
செஞ் சாந்தின் ஆர மார்பினன்,
சுனைப்
பூங் குவளைச் சுரும்பு ஆர் கண்ணியன்,
நடு
நாள் வந்து, நம் மனைப் பெயரும்
மடம்
ஆர் அரிவை! நின் மார்பு அமர் இன் துணை;
மன்ற
மரையா இரிய, ஏறு அட்டு,
செங்
கண் இரும் புலி குழுமும்; அதனால்,
மறைத்தற்
காலையோ அன்றே;
திறப்பல்
வாழி வேண்டு, அன்னை! நம் கதவே.
தோழி
கிழத்திக்கு நொதுமலர் வரையுமிடத்து அறத்தோடு நிற்பேன் என்றது.
அவன் மார்பில் சந்தனம். தலையில் குவளைப்பூ. நள்ளிரவில் வந்து நம் கதவைத் திறக்க முயல்கிறான். நீ அறியாப் பெண். உன் மார்புக்கு அவன் துணையாவான். மரையா இன மான்கள் ஓடும்படி ஆண்மானைக் கொன்ற புலி (படம்) உறுமும் வழியில் வந்துள்ளான். இப்போது கதவைத் திற. அன்னையை நான் பார்த்துக்கொள்கிறேன்.
கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:
Post a Comment