எறி
சுறாக் கலித்த இலங்கு நீர்ப் பரப்பின்,
நறு
வீ ஞாழலொடு புன்னை தாஅய்,
வெறி
அயர் களத்தினின் தோன்றும் துறைவன்
குறியான்
ஆயினும், குறிப்பினும், பிறிது
ஒன்று
அறியாற்கு
உரைப்பலோ, யானே? எய்த்த
இப்
பணை
எழில் மென் தோள் அணைஇய அந் நாள்
பிழையா
வஞ்சினம் செய்த
களவனும், கடவனும், புணைவனும், தானே.
கிழவன்
கேட்கும் அண்மையன் ஆகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
அம்மூவன் பாடல்
துறைவனின்
நீர்ப்பரப்பில் எறிந்து தாக்கும் சுறாமீன் செழித்திருக்கும். அந்த நீர்ப்பரப்பில் புன்னை,
ஞாழல் பூக்கள் கொட்டி வெறியாட்டு விழா நடைபெற்ற களம் போலக் காணப்படும். அந்தத் துறைவனுக்கும்
எனக்கும் நடைபெறவிருக்கும் திருமணத்திற்கு நாள் குறிக்கப்படவில்லை. குறிப்பினும் எங்களின்
உறவு பற்றி அறியாதவர்களுக்கு நான் சொல்ல வேண்டுமா? மூங்கில் போன்ற என் தோளை அணைப்பதற்கு
முன்பே அவன் சத்தியம் (வஞ்சினம்) செய்து தந்திருக்கிறான். என்னைக் களவாடியவனும் அவனே.
கடமைப்பட்டவனும் அவனே. என்னைப் புணையாகத் தாங்குபவனும் அவனே. (இப்படி எனக்கு எல்லாம்
அவனே).
கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:
Post a Comment