Pages

Friday, 29 August 2014

காதல் பாடல் குறுந்தொகை # 316


316. நெய்தல்

ஆய் வளை ஞெகிழவும், அயர்வு மெய் நிறுப்பவும்,
நோய் மலி வருத்தம் அன்னை அறியின்,
உளெனோ வாழி தோழி! விளியாது,
உரவுக் கடல் பொருத விரவு மணல் அடைகரை
ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட,
ஆய்ந்த அலவன் (படம்) துன்புறு துனைபரி
ஓங்கு வரல் விரிதிரை களையும்
துறைவன் சொல்லோ பிற ஆயினவே?

வரைவிடை ''வேறு படுகின்றாய்'' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

தும்பி சேர் கீரன்

கடலலை மோதும் மணல் அணைந்த கரையில் ஓரை ஆடும் மகளிர் ஒன்று கூடி நண்டை அங்குமிங்கும் ஓடச்செய்து துன்புறுத்தியபோது பெரிய அலை வந்து மகளிரை ஓட்டி நண்டின் துன்பத்தைப் போக்கும் துறைவன் அவன்.
அவன் என்னிடம் சொன்ன சொல் இப்போது அவனோடு சென்று பிறசொல் ஆகிவிட்டது.
பருமனுக்கேற்ப ஆய்ந்து போட்ட என் வளையல் கழல்கிறது. என் உடலிலே சோர்வு. நெஞ்சிலே வருத்தம். இவற்றையெல்லாம் அன்னை அறிந்தால் நான் வாழமுடியுமா?
தோழி! இன்னும் சாகாமல் வாழ்கிறேன்.

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

ஆங்கிலத்தில்இதன் செய்தி  

No comments:

Post a Comment