புள்ளும்
புலம்பின; பூவும் கூம்பின;
கானலும்
புலம்பு நனி உடைத்தே; வானமும்,
நம்மே
போலும் மம்மர்த்து ஆகி,
எல்லை
கழியப் புல்லென்றன்றே;
இன்னும்
உளெனே தோழி! இந்நிலை
தண்ணிய
கமழும் ஞாழல்
தண்ணம்
துறைவற்கு உரைக்குநர்ப் பெறினே.
வரைவிடை
முனிந்து கிழத்தி தோழிக்கு உரைத்தது.
பெருங்கண்ணன் பாடல்
எங்கும்
இரங்கல். பறவை புலம்பல். மலர் குவிதல்.
கானல் நிலம் ஒளி மறைந்து புலம்பல். வானத்திலும்
இருள். பொழுது போய்விட்டதால் என் உள்ளம் போல எல்லாமே இருண்டுவிட்டன.
தோழி! நான் இன்னும் இருக்கிறேனே! இதனை என் குளுமையான காதல் தலைவனுக்கு யாராவது சொன்னால் என்ன!
கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:
Post a Comment