சோலை
வாழைச் சுரிநுகும்பு இனைய
அணங்குடை
இருந் தலை நீவலின், மதன் அழிந்து,
மயங்கு
துயர் உற்ற மையல் வேழம்
உயங்கு
உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர,
ஆம்
இழி சிலம்பின் அரிது கண்படுக்கும்
மா
மலைநாடன் கேண்மை
காமம்
தருவது ஓர் கை தாழ்ந்தன்றே.
வரைவிடைக்
கிழத்தியை வன்சொல் சொல்லி வற்புறுத்தியது.
பெருந்தோட் குறுஞ்சாத்தன்
நுகும்பு
= வாழைக் குருத்து
நீவல்
= சொரிந்துகொள்ளல்
மதன்
– வலிமை
ஆம்
= நீர்
சோலையிலுள்ள
வாழை மரத்தில் ஆண்யானை தலையை முட்டிச் சொரிந்துகொண்டது. அதனால் வாழைக் குருத்து வருந்தியதே
தவிர அரிப்பு நீங்கவில்லை. அது வலிமை குன்றித் துன்புற்றது. அதன் வருத்தத்தைக் கண்ட
அதன் பெண்யானை அதன் பக்கத்தில் இருந்துகொண்டு ஆண்யானையைத் தடவிக் கொடுக்கவே ஆண்யானை
தண்ணீர் கசிந்தோடும் சோலையில் இனிதாக உறங்கிற்று. இப்படிப்பட்ட பெருமலை நாட்டை உடையவன்
அவன். அவனுடைய நட்பு காம இன்பம் தருவதில் ஒரு கை தாழ்ந்திருக்கிறது. (அவனை மணந்துகொண்டு
இருவரும் சம இன்பம் நுகரலாம்)
கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:
Post a Comment