வளை
உடைத்து அனையது ஆகி, பலர் தொழ,
செவ்
வாய் வானத்து ஐயெனத் தோன்றி,
இன்னாப்
பிறந்தன்று, பிறையே; அன்னோ,
மறந்தனர்
கொல்லோ தாமே களிறு தன்
உயங்குநடை
மடப்பிடி வருத்தம் நோனாது,
நிலை
உயர் யாஅம் தொலையக் குத்தி,
வெண்
நார் கொண்டு, கை சுவைத்து, அண்ணாந்து,
அழுங்கல்
நெஞ்சமொடு முழங்கும்
அத்த
நீள் இடை அழப் பிரிந்தோரே?
பிரிவிடைக்
கடுஞ்சொற் சொல்லிய தோழிக்குக் கிழத்தி உரைத்தது.-
கடம்பனூர்ச் சாண்டில்யன் பாடல்
கடம்பனூர்ச் சாண்டில்யன் பாடல்
நான்
அழ அவர் நீண்ட வழியில் பிரிந்து சென்றார். வழியில்
தன் பெண்யானை வருத்தத்தைப் பொறுக்க முடியா ஆண்யானை யாஅம் மரத்தைக் குத்தி அதன் நாரைத்
தன் பெண்யானை சுவைக்கும்படிக் கொடுத்துவிட்டுத் தான் தன் கையைச் சுவைத்து மகிழ்வதைப்
பார்ப்பாரோ மாட்டாரோ? உடைந்து கிடக்கும் வளையல் போல பிறை தோன்றும்
காலத்திலும் அவர் திரும்பி வரவில்லையே.
கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:
Post a Comment