''மெல்லிய, இனிய, மேவரு தகுந,
இவை
மொழியாம்'' எனச் சொல்லினும், அவை நீ,
மறத்தியோ
வாழி என் நெஞ்சே! பல உடன்
காமர்
மாஅத்துத் தாது அமர் பூவின்
வண்டு
வீழ்பு அயரும் கானல்
தெண்
கடல் சேர்ப்பனைக் கண்ட பின்னே?
காப்பு
மிகுதியான், நெஞ்சு மிக்கது வாய் சோர்ந்து,
கிழத்தி உரைத்தது.
அம்மூவன் பாடல்
மா மரத்துப்
பூக்களில் வண்டு மொய்க்கும் கானலை உடைய கடல் சார் நிலத்துச் சேர்ப்பனைக் கண்ட பின்னர்,
நெஞ்சே, நீ மறக்கமுடியுமா? மறந்துவிடு என்று மென்மையாகவும், இனிமையாகவும், விரும்பத்
தக்க வகையிலும் சொன்னாலும் நீ என் சொல்லைக் கேளாமல் மறக்கமாட்டேன் என்கிறாயே! [நான்
என்ன செய்வேன்]
கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:
Post a Comment