கண்
தர வந்த காம ஒள் எரி
என்பு
உற நலியினும், அவரொடு பேணிச்
சென்று, நாம் முயங்கற்கு அருங் காட்சியமே
வந்து
அஞர் களைதலை அவர் ஆற்றலரே;
உய்த்தனர்
விடாஅர் பிரித்து இடை களையார்
குப்பைக்
கோழித் தனிப் போர் போல,
விளிவாங்கு
விளியின் அல்லது,
களைவோர்
இலை யான் உற்ற நோயே.
காப்பு
மிகுதிக்கண், தோழி அறத்தொடு நிற்பாளாக,
தனது ஆற்றாமை தோன்றத் தலைமகள் தன்னுள்ளே கூறியது.
குப்பைக் கோழியார் பாடல்
என் எலும்பை
உருக்கும் இந்த காம நோய் பார்த்த என் கண்ணால் வந்தது. நானே சென்று அவரைத் தழுவலாம்
என்றால் அவரைக் காணமுடியவில்லை. அவராகவும் வரவில்லை.
கோழியைச்
சண்டைக்கு விட்டால் (படம்) விட்டவர் அதனை பிரித்து, சண்டையை நீக்கிவிடுவார்கள். ஆனால் குப்பையிலே
தாமே சண்டை போட்டுக்கொள்ளும் கோழிகளை யார் பிரித்துவிடுவார்கள். களைத்துப் போய்த் தாமே
விலகிக்கொண்டால்தான் உண்டு.
கி.மு. 2ஆம் நூற்றாண்டு
No comments:
Post a Comment