கொல்வினைப்
பொலிந்த கூர் வாய் எறிஉளி
முகம்
பட மடுத்த முளிவெதிர் நோன் காழ்
தாங்கு
அரு நீர்ச் சுரத்து எறிந்து, வாங்கு
விசைக்
கொடுந்
திமிற் பரதவர் கோட்டு மீன் எறிய,
நெடுங்
கரை இருந்த குறுங் கால் அன்னத்து * படம் *
வெண்
தோடு இரியும் வீ ததை கானல்,
கைதைஅம்
தண் புனற் சேர்ப்பனொடு
செய்தனெம்மன்ற, ஓர் பகை தரு நட்பே.
வரைவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கணக்காயன் தத்தன் பாடல்
கணக்காயன் தத்தன் பாடல்
கொல்வினைப் பொலிந்த கூர் வாய் எறிஉளி = கொல்லன் கைவினையால் பொலிவு பெற்ற கூரிய வாயை உடைய எறீயும் உளி =
தூண்டில்
முகம் பட மடுத்த முளிவெதிர் நோன் காழ் = உலர்ந்த மூங்கிலின் முக நுனியில் கட்டப்பட்ட வலிமை மிக்க வயிரம்
= தூண்டில் முள்
வளைந்த
திமிலில் செல்லும் பரதவர் மூங்கில் நுனியில் கட்டப்பட்ட தூண்டில் முள்ளை நீர்க்காட்டில்
எரிய, அதன் ஓசையைக் கேட்டு கழிக்கரையில் இருந்த அன்னப்பறவை கூட்டம் பறந்தோடும் தாழை
வளர் புனல் நீர்ச் சேர்ப்பனோடு ஒரு நட்பு. அதுவோ பகை தரு நட்பு. பிரியும் நட்பு.
கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:
Post a Comment