Pages

Wednesday, 27 August 2014

காதல் பாடல் குறுந்தொகை # 303


303. நெய்தல்

கழி தேர்ந்து அசைஇய கருங் கால் வெண் குருகு
அடைகரைத் தாழைக் குழீஇ, பெருங் கடல்
உடைதிரை ஒலியின் துஞ்சும் துறைவ!
தொல் நிலை நெகிழ்ந்த வளையள், ஈங்குப்
பசந்தனள்மன் என் தோழி என்னொடும்
இன் இணர்ப் புன்னைஅம் புகர் நிழல்
பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே.

செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.

அம்மூவன் பாடல்

கருங்கால் வெண்குருரு (படம்) உப்பங்கழியை அடுத்துள்ள தாழை மரத்தில் கூட்டமாக இருந்துகொண்டு பெருங்கடலின் ஒலித் தாலாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் துறைவனே! இனிய புன்னை மர அருநிழலில் நீ இவளுடன் சேர்ந்து நண்டை விளையாட விட்ட நாளிலிருந்து இவள் வளையல் பழைய நிலையில் இல்லாமல் கழன்றுகொண்டிருக்கிறது. உடம்பிலும் பசலை நிற நோய் பரவுகிறது. (மணந்து சீர் செய்க)

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment