Pages

Tuesday, 26 August 2014

காதல் பாடல் குறுந்தொகை # 300

படம் 
மாந்தளிர் போன்ற மாமை நிறம் கொண்ட
மாயவள்
பாடல் தொடர்
"மாயோய்"
300. குறிஞ்சி

குவளை நாறும் குவை இருங் கூந்தல்,
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய்,
குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன
நுண் பல் தித்தி, மாஅயோயே! 
நீயே, அஞ்சல்'' என்ற என் சொல் அஞ்சலையே;
யானே, குறுங் கால் அன்னம் குவவு மணற் சேக்கும்
கடல் சூழ் மண்டிலம் பெறினும்,
விடல் சூழலன் யான், நின்னுடை நட்பே.

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சமும் வன்புறையும் கூறியது.

சிறைக்குடி ஆந்தையார் பாடல்

கூந்தலில் குவளைப்பூ மணம். சிவந்த வாயில் ஆம்பல் பூ மணம். அதில் கொக்கு நிறம் போன்ற வெண்மையான பற்கள். நீ மாயவள். “அஞ்சாதேஎன நான் கூறும் சொல் நிலைத்திருக்குமா என்று நீ அச்சப்பட வேண்டாம். அன்னம் கடலிலும் மணலிலும் மேயும் இந்த உலகத்தையே உனக்கு ஈடாகப் பெறுவதாயினும் உன் நட்புறவைக் கைவிடமாடேன்.  

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment