Pages

Tuesday, 26 August 2014

காதல் பாடல் குறுந்தொகை # 299


299. நெய்தல்

இது மற்று எவனோ தோழி! முது நீர்ப்
புணரி திளைக்கும் புள் இமிழ் கானல்,
இணர் வீழ் புன்னை எக்கர் நீழல்,
புணர்குறி (படம்) வாய்த்த ஞான்றைக் கொண்கற்
கண்டனமன், எம் கண்ணே; அவன் சொல்
கேட்டனமன் எம் செவியே; மற்று அவன்
மணப்பின் மாண்நலம் எய்தி,
தணப்பின் ஞெகிழ்ப, எம் தட மென் தோளே?

சிறைப்புறமாகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

வெண்மணிப் பூதி

இது ஏன், தோழி. கடலிலே திளைத்து விளையாடிய பறவை அமர்ந்திருக்கும் புன்னை மரப் வேர்ப்பகுதி நிழலில் என்னைக் கொண்ட கொண்கனைப் புணரும் குறி வாய்த்தபோது கண்டது கண்; அவன் சொல் கேட்டது செவி. ஆனால் அவன் தழுவிம்போது மனமகிழ்ந்திருந்து, அவன் பிரிந்திருக்கும்போது வருந்தி மெலிவது என் தோளாக இருக்கிறதே!

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment