Pages

Monday, 25 August 2014

காதல் பாடல் குறுந்தொகை # 297


297. குறிஞ்சி

''அவ் விளிம்பு உரீஇய கொடுஞ் சிலை மறவர்
வை வார் வாளி விறற் பகை பேணார்,
மாறு நின்று எதிர்ந்த ஆறுசெல் வம்பலர்
உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும்
கல் உயர் நனந் தலை, நல்ல கூறி, (படம்)
புணர்ந்து உடன் போதல் பொருள்'' என,
உணர்ந்தேன் மன்ற, அவர் உணரா ஊங்கே.

தோழி வரைவு மலிந்தது.

காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணன் பாடல்

அம்பைத் தீட்டி வைத்துக்கொண்டு வில்லும் கையுமாகத் திரியும் மறவர் வழிப்பறி செய்து மேட்டிலே வைத்திருக்கும் பதுக்கை ஊர் போலத் தோன்றும். அதன் வழியாக என்னவளை அழைத்துக்கொண்டு செல்வதுதான் எனக்குச் செல்வம்.
இப்படி அவன் தீர்மானம் செய்தான். 

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment