Pages

Monday, 25 August 2014

காதல் பாடல் குறுந்தொகை # 295


295. நெய்தல்

உடுத்தும், தொடுத்தும், பூண்டும், செரீஇயும்,
தழை அணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி,
விழவொடு வருதி, நீயே; இஃதோ
ஓர் ஆன் வல்சிச் சீர் இல் வாழ்க்கை
பெரு நலக் குறுமகள் வந்தென,
இனி விழவு ஆயிற்று என்னும், இவ் ஊரே.

வாயில் வேண்டிச் சென்ற கிழவற்குத் தோழி உரைத்தது.

தூங்கலோரி பாடல்

அது தழையணி பொலிந்த தோழியர் விளையாட்டு. அங்கே நீ வந்தாய். தழையாடை உடுத்தியிருந்தாய். அவர்களுக்கு உடுத்திவிட்டாய். தழையாடை தலையில் பூண்டிருந்தாய். அவர்கள் தலையில் செருகிவிட்டாய். இப்படி அவர்களோடு சேர்ந்து விழாக் கொண்டாடினாய். இந்த விழாவில் ஒருத்தி [புதியவள்] சேர்ந்து வந்தாள். அவள் ஒரு பசுவை வைத்துக்கொண்டு அதன் பாலால் வாழ்க்கை நடத்தும் அழகிய சிறுமி. அவளை நீ பார்த்ததும் ஊரே பேசிக்கொள்ளும் புதியதோர் விழாவாக அது மாறிவிட்டது.


படம் - தழையாடை - ஆப்ரிக்கா – நைஜீரியா, கானா நாட்டுக் கோமா இன மக்கள்


கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment