கள்ளின்
கேளிர் ஆர்த்திய, உள்ளூர்ப்
பாளை
தந்த பஞ்சிஅம் குறுங் காய்
ஓங்கு
இரும் பெண்ணை நுங்கொடு (படம்) பெயரும்
ஆதி
அருமன் மூதூர் அன்ன,
அய
வெள்ளாம்பல் அம்பகை நெறித் தழை
தித்திக்
குறங்கின் ஊழ் மாறு அலைப்ப,
வருமே
சேயிழை, அந்தில்
கொழுநற்
காணிய; அளியேன் யானே!
பரத்தையிற்
பிரிந்து வந்த கிழவற்கு வாயிலாகப் புக்க தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கள்ளில் ஆத்திரையன்
குளத்தில் பூத்த ஆம்பலால் செய்த தழையாடை இடையிடையே விலகி கால் தொடை தெரியுமாறு உடுத்திக்கொண்டு கொழுநனைக் காண்பதற்கு அவள் (பரத்தை) அவ்வப்போது வருவாள். (அவள் முன்) நான் எளியவள் – என்கிறாள் அவன் மனைவி.
அரசன்
ஆதி அருமன் நாட்டில் கள்ளைத் தந்து உறவினர்க்கு ஊட்டிய பனைமரம் பின்னர் நுங்கு தந்து
உதவும். அதுபோல அவள் ஊட்ட வருவாளே! என்று மனைவி கூறுகிறாள்.
கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:
Post a Comment