Pages

Saturday, 23 August 2014

காதல் பாடல் குறுந்தொகை 289

289. முல்லை

வளர்பிறை போல வழிவழிப் பெருகி,
இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு
குழை பிசைந்தனையேம் ஆகி சாஅய்,
உழையர் அன்மையின் உழப்பது அன்றியும்,
மழையும் தோழி! மான்றுபட்டன்றே;
பட்ட மாரி படாஅக் கண்ணும்,
அவர் திறத்து இரங்கும் நம்மினும்,
நம் திறத்து இரங்கும், இவ் அழுங்கல் ஊரே.

பாடியவர் – பெயர் தெரியவில்லை

''காலம் கண்டு வேறுபட்டாள்'' எனக் கவன்ற தோழிக்கு, ''காலத்து வந்திலர் என்று வேறுபட்டேனல்லென்; அவரைப் புறத்தார், ''கொடியர்'' என்று கூறக்கேட்டு வேறுபட்டேன்''என்று, தலைமகள் சொல்லியது

நான் அவரை எண்ணி நொந்துகொண்டிருக்கிறேன்.
ஊரார் என் நிலைமையை எண்ணிக் கவலைப்படுகின்றனர்.
கடையும் கீரை போன்றது என் வளையல் கழலும் துன்பம்.
அது வளர்பிறை போலப் பெருகிக்கொண்டே இருக்கிறது.
அவர் என்னுடன் இல்லை.
(அவர் வந்துவிடுவேன் என்று சொன்ன) பருவ மழையும் பொழிகிறது.
மழை பொழியாவிட்டாலும் (என் மனம் எப்போது பொழியும் அவர் வர என்று எண்ணி) ஏங்குகிறது.

No comments:

Post a Comment