Her breast (image) is brimming cone shaped defeating SEMBU Image (a mount shaped vessel used to drink water.)
Alas! Her waist is shrinking being unable to bear.
She is wearing leaves-dress on her female-point.
The people in the village are worried about her maturity.
(The friend-maid pointed these words to her lady’s lover waiting to indicate that her lady is in her mother’s safe gourd)
This is a poem compiled by PERI-SATTAN.
His native was Vadamam village.
Gold-caret-testing is his profession.
2nd century B.C.
159. குறிஞ்சி
''தழை அணி அல்குல் தாங்கல் செல்லா
நுழை சிறு நுசுப்பிற்கு எவ்வம் ஆக,
அம் மெல் ஆகம் நிறைய வீங்கிக்
கொம்மை வரி முலை (படம்) செப்புடன் (படம்) எதிரின;
யாங்கு ஆகுவள்கொல் பூங்குழை?'' என்னும்
அவல நெஞ்சமொடு உசாவாக்
கவலை மாக்கட்டு இப் பேதை ஊரே.
தலைமகன் சிறைப்புறமாகத் தோழி செறிப்பறிவுறுத்தது;
உயிர் செல வேற்று வரைவு வரினும் அது மாற்றுதற்கு நிகழ்ந்ததூஉம் ஆம்.
வடம வண்ணக்கன் பேரிசாத்தன் பாடல்
அல்குல் – பெண்-உறுப்பு *
நுழை = உள்ளதன் நுட்பம் (தொல்காப்பியம் உரியியல்)
நுசும்பு = இடை *
கொம்மை – கூமாச்சியான
அவள் தன் அல்குலை மறைக்குத் தழையாடை அணிந்திருந்தாள்.
அவள் மார்பகத்தில் வீங்கிக்கொண்டு கும்பமாகச் செம்பு போல் முலை பருத்துக்கொண்டிருந்தது.
அதனைத் தாங்க முடியாமல் அவள் இடுப்பு சுருங்கியிருந்தது.
இனி அவள் என்ன ஆவாளோ என ஊர்மக்கள் கவலைப்படுகிறார்கள்.
(தாயின் பாதுகாப்பில் அவள் இருக்கிறாள் என்பதைத் தோழி அவளை நாடி வந்துள்ள அவளது காதலனுக்கு இவ்வாறு நாசுக்காக எடுத்துரைக்கிறாள்)


No comments:
Post a Comment