You! Rain with thunder and storm! (Image) You dread me the poor girl having enormous strength to shake the Himalaya Mountain. You have nothing mercy upon me. I am in wail without his company.
The world spoken by loving lady addresses are common to both of his lover and rain.
He is waiting at the distance sight for her.
(It was believed that thunder will kill the cobra while it raising head and it is also one of its strengths)
(The aim of these words is to call his attention)
This is a poem compiled by AUVAIYAR a female poet
2nd century B.C.
158. குறிஞ்சி
நெடு வரை மருங்கின் பாம்பு பட இடிக்கும்
கடு விசை உருமின் கழறு குரல் அளைஇக்
காலொடு வந்த கமஞ் சூல் மா மழை! (படம்)
ஆர் அளி இலையோ நீயே? பேர் இசை
இமயமும் துளக்கும் பண்பினை;
துணை இலர், அளியர், பெண்டிர்; இஃது எவனே?
தலைமகன் இரவுக்குறி வந்துழி,
அவன் கேட்பத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
ஒளவையார் பாடல்
மழையே! நீ சிறந்த கொடையாளி அல்லவா? இமயமலையையும் ஆடச்செய்யும் பண்பு உனக்கு உண்டு அல்லவா?
நான் துணை இல்லாமல் இருக்கிறேன்.
இரங்கத் தக்கவள்.
மேலும் ஒரு பெண்.
துன்புறுத்தலாமா?
இது காதலியின் கேள்வி.
காதலனையும், மழையையும் கேட்கும் பொதுப்பொருள் கேள்வி.
மழை
பெருமழை
காற்றோடு வந்த மேகக்கூட்டத்தின் மழை
இடி முழக்குடன் வந்த மழை
பாம்பு படமெடுத்து ஆடும்போது இடித்து அதனைக் கொல்லும் மழை
(காதலனுக்காக அவள் காத்திருக்கும்போது இடியுடன் மழை வந்தது. அந்த இடிமழையில் அவன் வந்தான்)

The event is potrayed true to its Original.--A land mark of a good translation
ReplyDeletekaviyogidrp.pandian