He is so crude leaving me alone and passes through arid land to earn money.
There the sun beam seems like a skin worn out by a snake (images) stands erect.
Male eagle flies for prey.
Female eagle calls its male with its affection.
Such a kind of dry forest, it is.
How can he spare me without my thought?
This is a poem compiled by SEETHALAI SAATHAN of Madurai village.
2nd century B.C.
154. பாலை
யாங்கு அறிந்தனர்கொல் தோழி! பாம்பின்
உரி (படம்) நிமிர்ந்தன்ன உருப்பு அவிர் அமையத்து,
இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி,
பொறி மயிர் எருத்தின் குறு நடைப் பேடை
பொரிகாற் கள்ளி விரிகாய் அம் கவட்டுத்
தயங்க இருந்து, புலம்பக் கூஉம்
அருஞ் சுர வைப்பின் கானம்
பிரிந்து, சேண் உறைதல் வல்லுவோரே?
பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்து, தலைமகள் தோழிக்கு உரைத்தது.
மதுரைச் சீத்தலைச் சாத்தன் பாடல்
கடும் பகல்.
பாம்பு உரித்த தோல் நிமிர்ந்து நிற்பது போன்ற வெட்ட வெயில்.
ஆண் கழுகு இரை தேடச் செல்லும்.
அதனை நினைத்துப் பெண்கழுகு காய்ந்த மரக்கிளையில் இருந்துகொண்டு தன் துணையை அழைக்கும்.
பொருள் தேடச் சென்ற அவர் இப்படிப்பட்ட வழியில் சென்று என்னைப் பிரிந்திருக்கும் மன வலிமை அவருக்கு இருக்கிறதே!


படங்கள் அருமை. நல்ல தேடல். நல்ல பொருத்தம்.குறுந்தொகை விரைந்து விரிகிறது.போற்றி வணங்குகின்றேன்.
ReplyDelete